பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாநகர் விவசாய அணி சார்பாக அதன் மாநகர் தலைவர் பி.முத்துப்பாண்டி அவர்களின் தலைமையில் துவரிமான், கீழமாத்தூர், காமாட்சிபுரம், மேலமாத்தூர் போன்ற கிராமங்களில் கட்சி கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் காமாட்சிபுரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்து,பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பெயரில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வின் போது 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை மற்றும் பயன் தரும் மரக்கன்றுகளை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி வழங்கி பொதுமக்களிடையே மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்வில் விவசாய அணி மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் துரைபாஸ்கர், மாநில திட்ட பொறுப்பாளர் அழகுராஜா, மண்டல் தலைவர் கண்ணன், காமாட்சிபுரம் கிளை தலைவர் பாலாஜி, விவசாய அணி பரவை மண்டல் தலைவர் சந்திரசேகர் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.