Sunday , February 1 2026
Breaking News
Home / செய்திகள் / மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக மதுரை புதூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !
NKBB Technologies

மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக மதுரை புதூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட SDPI கட்சியின் சார்பாக புதூர் பேருந்து நிலையம் அருகே மாநில செயற்குழு உறுப்பினரும், மண்டல செயலாளருமான முஜிபுர் ரஹ்மான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்
SDPI_கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் மாநில துணை தலைவர் S.M.ரபீக், மாநில செயலாளர் அபூபக்கர் சித்தீக், அதிமமுக நிறுவனர் பசும்பொன் பாண்டியன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வெ.கணியமுதன், திமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பாக்கியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசின் ஹிந்தி திணிப்புக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.

மேலும் இந்த ஆர்பாட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள்,தொகுதி, வார்டு, கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள் ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஜமாத்தார்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில் நன்றி கூறினார்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES