Wednesday , December 17 2025
Breaking News
Home / கரூர் / ஆயுதபூஜை உருவான கதை இளைஞர் குரலின் சிறப்புப்பார்வை
NKBB Technologies

ஆயுதபூஜை உருவான கதை இளைஞர் குரலின் சிறப்புப்பார்வை

  • #ஆயுதபூஜை :

    ஆயுதம் என்னும் சொல்லுக்கு எதிரிகளின் ஆயுளை அதாவது உயிரை அளிக்கும் சாதனங்கள் என்று பொருள் ஆகும், ஆயுதத்திற்கும், கருவிக்கும், நிறைய வேறுபாடுகள் உள்ளன.

    நீங்கள் நினைப்பது போல் தொழில் செய்யும் கருவிகளை வைத்து வணங்கி பூஜை செய்துதான் ஆயுத பூஜை என்பது உண்மையல்ல,

    ஆயுதபூஜை உருவானதற்கு மிகப் பெரிய வரலாறு உண்டு….

    அதாவது #மாமன்னர் #அசோகமகா #சக்கரவர்த்தி இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பொழுது, கலிங்க நாட்டின் மீது போர் தொடுத்து #வெற்றி கண்டார், (அந்த வெற்றியின் பொழுது பல்லாயிரக்கணக்கான வீரர்களைக் கொன்று குவித்தும் பல வீரர்களை சிறைபிடிக்கும் வெற்றி கண்டிருந்தார்)

    தகவலறிந்த #உபகுப்தா என்னும்
    புத்தஞானி அசோகரை சந்தித்து மன்னா நீர் கலிங்கப் போரில் அடைந்தது வெற்றி அல்ல தோல்வியே ஆகும் என்றார். மன்னருக்கு உடனே ஆச்சரியம்!!!
    என்ன காரணம் என்று அந்த ஞானியை பார்த்து கேட்கிறார்?
    அதற்கு அந்த ஞானி நீங்கள் போரிட்டு வென்ற இடத்தை ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வாருங்கள் என்கிறார்,

    ஞானியின் சொல்லை கேட்ட அசோக மன்னன் போர் நடந்த இடத்திற்கு புறப்பட்டுச் செல்கிறார், அங்கே நிறைய #பிணங்களும் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டு இருந்த கை, கால்களை, இழந்த துடித்துக்கொண்டிருந்த மனிதர்களையும் கண்டு தவித்துப் போனார், போரில் #இறந்து போனவர்களின் #மனைவிமார்களும், #தாய்மார்களும் ,#குழந்தைகளும் மற்றும் #உறவினர்களும், கதறி அழும் காட்சி மாமன்னர் அசோகர் அவர்களை மனம் நடுங்கச் செய்தது,

    ஆகையினால்,

    திரும்பிவந்து புத்த ஞானியைபார்த்து தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். செய்த பாவத்திற்கு #பரிகாரமாக இனிமேலாவது போர் செய்யும் செயலை அறவே விட்டுவிடு என்றார் உபகுப்தா, மேலும் அனைத்து உயிர்களிடத்திலும் #அன்பு காட்டு என்று கூறினார்.
    #இரத்தகரை படிந்த ஆயுதங்களை கழுவி தூய்மை செய், இனி ஒருபோதும் ஆயுதங்களை பயன்படுத்தி ஒரு உயிரையும் கொள்ளமாட்டேன் அவ்வாறு மற்றவர்களையும் செய்யவும் அனுமதிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொள், என்று புத்த ஞானி கேட்டுக்கொண்டார்.

    ஒவ்வொரு ஆண்டும் இதேநாளில் போர் ஆயுதங்களை கழுவி தூய்மைப் படுத்தி அடுக்கிவைத்து அசோக மன்னன் போர்தொடுக்க மாட்டேன் எவ்வித உயிரையும் கொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து கொண்டு, புத்த பகவானை வணங்கி மரியாதை செலுத்தினார், அந்த நாளையே
    #ஆயுதபூஜை என்று கூறி, விழாவாக கொண்டாடினார்.

    ஆயுதம் களைதல் என்னும் பெயரால் ஆண்டுதோறும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு வருகிறது

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES