
மாநகரின் 15 கி.மீ. சுற்றளவில் இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் மதுரை அப்போலோ மருத்துவமனை
உலகின் வேறெந்த சிறந்த மருத்துவனைக்கும் இணையான தரமான சேவையை அவசர சிகிச்சைப் பிரிவில் அப்போலோ மருத்துவமனை அளிக்கிறது. சர்வதேச தரம் வாய்ந்த அவசர சிகிச்சை கட்டமைப்பை உருவாக்கும் அப்போலோ மருத்துவமனை தலைவரின் தொலைநோக்குப் பாதையில் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது.
நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நிலையைப் பொருத்தவரை ஆம்புலன்ஸ் சேவைகள், நோயாளியை சிகிச்சை பெறும் இடத்திலிருந்து மற்றும் முதலுதவி பெறும் இடத்திலிருந்து இடமாற்றம் செய்தல் ஆகிய சேவைகளை அப்போலோ வழங்குகிறது. அதேவேளையில் ஆம்புலன்சில் நோயாளி நுழையும் நொடியிலிருந்து மருத்துவ சேவைகளை அப்போலோ தொடங்குகிறது. கோல்டன் ஹவர் எனக் குறிப்பிடப்படும் மருத்துவமனை சென்றடைவதற்குள்ளான காலத்தில் பெரும்பாலான முதலுதவிகள் மற்றும் உயிர்காப்பு வழிமுறைகளை ஆம்புலன்சில் உள்ள தேர்ச்சி பெற்ற அவசர சிகிச்சை குழுவினராலேயே அளிக்கப்படுவது அப்போலோவின் தனிச்சிறப்பு.
அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவானது அனைத்து மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளது. நோயாளிக்கு உயர் தரமான மருத்துவ சேவையை அளிப்பதற்கு தேவைப்படும் உயர்தரமான மானிடர்கள், ரத்தப் பரிசோதனை ஆய்வகம், அத்தியாவசிய மற்றும் அனைத்து உயிர் காப்பு மருந்து நிலையம், பரிசோதனை முடிவுகளை மிகத் துல்லியமாகவும், உடனடியாகவும் தெரிந்துகொள்ள உதவும் அதிநவீன சாதனங்கள் அப்போலோ மருத்துவமனையில் உள்ளன. அப்போலோவின் அவசர சிகிச்சைப் பிரிவானது கதிரியக்கப் பிரிவு, ஆய்வகம் மற்றும் ரத்த வங்கியுடன் இணைந்து மிக விரைவாக மற்றும் திறம்பட செயலாற்றுகிறது. NABH போன்ற தேசிய தர நிர்ணய அமைப்புகள் அளித்திருக்கும் அங்கீகாரம் அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிறப்பான சிகிச்சைக்கு சான்றாக உள்ளன.
அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவானது விஷப் பரவல், நீரிழிவு, சிறுநீரக செயலிழப்பு, சுவாச சிக்கல்கள், இதய துடிப்பு பிரச்சினைகள், எதிர் உயிர் தொற்றுகள் போன்ற உடனடி மருத்துவ தேவைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கிறது. மேலும் சாலை விபத்துகள், தாக்குதல், தீக்காயம், தீவிர அடிவயிற்று வலி, உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடுதல், ரத்தப் போக்கு, மலக்குடல் பாதிப்புகள் போன்ற உடனடி அறுவை சிகிச்சை தேவைகளுக்கான அனைத்து வசதிகளுடன் 24 மணி நேரமும் அப்போலோ மருத்துவமனை சேவையளிக்கிறது.
வயது வித்தியாசமின்றி, இளைஞர்கள் மட்டுமின்றி, பச்சிளம் குழந்தைகள், குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் போன்ற கவனமான சிகிச்சை தேவைப்படும் சிறப்புப் பிரிவினருக்கும் மிகத் தரமான சிகிச்சையை அளிப்பதில் தேர்ச்சி பெற்ற மருத்துவர் மற்றும் பணியாளர் குழுவினரையும், அனைத்து அதிநவீன வசதிகளையும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பெறக்கூடிய அவசர சிகிச்சைப் பிரிவை மதுரை அப்போலோ மருத்துவமனை கொண்டுள்ளது என்று அவசர சிகிச்சைப் பிரிவின் மூத்த மருத்துவ நிபுணர் ஜூடு வினோத் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் மருத்துவ நிபுணர் மதன் ராஜா ஆகியோர் தெரிவித்தனர்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது மதுரை அப்போலோ மருத்துவமனை சிஓஓ நீலக்கண்ணன், டாக்டர் பிரவீண் ராஜன், JDMS அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மார்க்கெட்டிங் பிரிவு பொதுமேலாளர் கே .மணிகண்டன், நிர்வாக பொதுமேலாளர் டாக்டர் நிகில் திவாரி ஆகியோர் உடனிருந்தனர்.
24 மணி நேரமும் 1066 கட்டுப்பாட்டு அறை எண்ணை அழைக்கலாம்.
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்