மதுரை மாட்டுத்தாவணி காய்கறி காய்கறி மார்க்கெட்டில் மதுரை கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வர்த்தக அணி சார்பில் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து வியாபாரிகளிடம் கையெழுத்து வேட்டை மாவட்ட வர்த்தக அணி தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்றது .இந்நிகழ்வில் பாஜக மாநில. தலைவர் அண்ணாமலை பங்கேற்று வியாபாரிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.பின்னர் அவர் பேசியதாவது :- விடியல் அரசு என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட திமுக விடியாத அரசாக செயல்பட்டு வருகிறது .தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மின் கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் .தமிழக முழுவதும் ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து வருகிற 15 ஆம் தேதி 1200 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுகின்ற வகையில் அடிப்படை வசதிகள் செய்து வருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் .மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார் இந்நிகழ்வில் நகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன், மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், ஊடகப்பிரிவு தலைவர் செல்வமாணிக்கம் உள்பட ஏராளமான மாவட்டம் /மண்டல் மற்றும் வார்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்