Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை 20-வது வார்டு விளாங்குடியில், அதிமுக பகுதி செயலாளர் கே.ஆர்.சித்தன், 20-வது வார்டு வட்டக்கழக செயலாளர் மார்க்கெட் மார்நாடு தலைமையில் புதிய வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்.!
NKBB Technologies

மதுரை 20-வது வார்டு விளாங்குடியில், அதிமுக பகுதி செயலாளர் கே.ஆர்.சித்தன், 20-வது வார்டு வட்டக்கழக செயலாளர் மார்க்கெட் மார்நாடு தலைமையில் புதிய வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்.!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவ.9-ம் தேதி தொடங்கியுள்ளது. வரும் டிச.8-ம் தேதி வரை ஒரு மாதம் வரை இப்பணி நடைபெறுகிறது.

இக்காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் இவற்றுடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான படிவங்களையும் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வழங்கலாம்.

இதற்கிடையில், பணிக்கு செல்வோர் வசதிக்காக, தமிழகம் முழுவதும் இன்று நவம்பர்.12 ஆம் தேதி, நாளை நவ.13-ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

அந்த வகையில் மதுரை மாநகராட்சி 20-வது வார்டு விளாங்குடியில், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ ஆலோசனைப்படி, மேற்கு 6-ஆம் பகுதி செயலாளர் கே.ஆர்.சித்தன் மற்றும் 20-வது வார்டு வட்டக்கழக செயலாளர் மார்க்கெட் மார்நாடு ஆகியோர் தலைமையில் புதிய வாக்காளர் சேர்க்கை,பெயர் திருத்தம்,நீக்கம், சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் 1-வது வார்டு வட்டக்கழக செயலாளர் மலைச்சாமி, 20-வது அவைத்தலைவர் கரிசல்பட்டி சேகர், மேற்கு 6-ம் பகுதி எம்ஜிஆர் இளைஞரணி பகுதி செயலாளர் பில்டர் கண்ணன், 20- வது வார்டு நிர்வாகிகள் அழகர்,ராசு, மற்றும் 1-வது வார்டு அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES