தெரியுமா சேதி?
இந்தியாவின் அசுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் தமிழகத்தின் 6 ரயில் நிலையங்கள் இடம் பெற்று உள்ளன.
சென்னை – பெருங்களத்தூர் முதல் இடத்தையும் கிண்டி 2வது இடத்தையும் இதை தொடர்ந்து டெல்லி சடார் Uஜார் 3வது இடத்தையும் வேளச்சேரி, கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோவில், பழவந்தாங்கல் ஆகியவையும் தொடர்ந்து கேரள மாநிலம் ஒட்டப்பாலம், பீகாரை சேர்ந்த அராரியா கோர்ட்,, இதை அடுத்து உ.பியை சேர்ந்த குர்ஜா வும் இடம் பெற்று உள்ளன.
தூய்மையான ரயில் நிலையங்கள் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் முதல் இடத்தையும், ஜோத்பூர் 2வது இடத்தையும், துர்காபுரா 3வது இடத்தையும் பிடித்து உள்ளது. இதனை தொடர்ந்து காந்திநகர், சூரத் கர், விஜயவாடா, உதய்பூர் நகரமும் அஜ்மீர், ஹரித்வார் ஆகிய ரயில் நிலையங்களும் பிடித்து உள்ளன. இதன்படி முதல் 10 இடங்களில் ராஜஸ்தானில் மட்டும் 7 ரயில் நிலையங்கள் இடம் பெற்று உள்ளன. ஆதாரம் -ரயில்வே அமைச்சகத்தின் ஆய்வு குறிப்பு.