Friday , January 30 2026
Breaking News
Home / இந்தியா / ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
NKBB Technologies

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து புதனன்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரியலூர் ஆட்சியராக இருந்த வினய் மாற்றப்பட்டு டி.ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார்.அரியலூர் ஆட்சியர் வினய் மதுரை ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கடந்த 6 மாதங்களில் மதுரை மாவட்டத்திற்கு 4 ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை செயலாளர், ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து ராதாகிருஷ்ணன் அங்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளராக பி.சந்திரமோகன் நியமனம். அதேபோல் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை செயலர் தீரஜ் குமார் எரிசக்தித்துறையை கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ் பாபுவுக்கு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக்கழக நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தூர்தர்ஷன் இயக்குநராக இருந்த சுப்ரியா சாஹூ குன்னூர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழக இணை மேலாண் இயக்குநராக வினீத் நியமனம் செய்யயப்பட்டுள்ளார்.
சுற்றுலா மற்றும் கலாசாரத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக அசோக் டோங்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக அபூர்வ வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES