மதுரை அப்போலோ மருத்துவமனையில் 51 வயது நபருக்கு மாற்று கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதுவிரைவாக செயல்பட்ட டாக்டர்கள் பணியாளர்கள், குழுவினர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறதுமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் சிகிச்சைக்காக வைக்கப்பட்டு இருந்து மூளைச்சாவு ஏற்பட்ட நபரிடம் இருந்து கல்லீரல் பெறுவதற்கான வாய்ப்பு குறித்த தகவல் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு கிடைத்தது. உடனடியாக பணிகளை தொடங்கிய மருத்துவ குழுவினர் மூளை சாவு அடைந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட கல்லீரலின் ஏற்புத்தன்மை மற்றும் செயல் திறன் உறுதி செய்யப்பட்டு சரியாக காலை 10.00 மணிக்கு பெறப்பட்டது. மேலும் மாற்று கல்லீரலை வேகமாகவும் பாதுகாப்பாகவும் கொண்டு வருவதற்கு போக்குவரத்து காவலர்கள் உதவியுடன் 2 1/2 நிமிடத்திற்குள் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு மாலை 3-மணிக்குள் நோயாளிக்கு மாற்று கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதையடுத்து அவர் மாற்று உறுப்பு தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு தொடர் கண்காணிப்பில் இருந்தார்.மாற்று கல்லீரல் நன்றாக செயல்படுவது உறுதி செய்யப்பட்டு தற்போது புதிய கல்லீரலுடன் நோயாளி நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் கூறுகையில்:- பொதுவாக இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இரண்டு வாரத்திற்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும். தற்பொழுது இவர் நல்ல உடல் நிலையில் உள்ளதால் தற்பொழுது ஒரு வாரத்திலேயே டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தெரிவித்தனர்.இந்த மாற்று அறுவை சிகிச்சையில் டாக்டர்கள் சஞ்சய் கோவில்,மதுசூதனன்,கார்த்திகேயன்,மஞ்சுநாத்,ராஜேஷ்பிரபு,பிரவீன்குமார்,ஐயப்பன், கணேஷ் ஆகியோர்அடங்கிய மருத்துவ குழுவினர் இந்த மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். தலைமை செயல்பாட்டு அதிகாரி நீலக்கண்ணன், உதவி இயக்குநர் டாக்டர்பிரவீன்ராஜன்,பொது மேலாளர் நிகில்திவாரி மற்றும் மாற்று உறுப்பு ஒருங்கிணைப்பாளர் பொன்முருகன் ஆகியோர் இந்த அறுவை சிகிச்சை துரிதமாகவும் சிறப்பாகவும் நடைபெறுவதில் முக்கிய பங்கு வகித்தனர். மாற்றுக் கல்லீரல் அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்து முடித்த டாக்டர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்