பிரதமர் மோடி திட்டத்தில் வீடு கட்டும் பயனாளியை மிரட்டிய 42 வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வியின் கணவர் கார்மேகத்தை கைது செய்யக்கோரி மதுரை முனிச்சாலையில் மதுரை தெற்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை நகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் மகா சுசீந்திரன் பேசுகையில் :-மதுரை மாநகராட்சி வார்டுகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை .ஆனால் திமுக கவுன்சிலரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது .அவர்கள் பொதுமக்களை மிரட்டி பணம் சம்பாதிப்பதில் குறியாக இருந்து வருகின்றனர்.மதுரை நகர் 41வது வார்டில் பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் வீடு கட்டுகின்ற ஏழைத் தொழிலாளி கமலா, அவரது கணவர் கருப்பையா ,மகன் மணிகண்டன் ஆகியோரை 42 வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வியின் கணவர் கார்மேகம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அவரது அராஜக போக்கை காவல்துறையினர் இதுவரை கண்டிக்கவில்லை ..இதுபோன்று 41வது வார்டு திமுக கவுன்சிலர் செந்தாமரைக்கண்ணன் மாநகராட்சி மின் பொறியாளரை தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும் அவர் ஒரு கோடியே 38 லட்சம் செலவு செய்து கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன் என்று வீடியோவில் கூறியிருக்கிறார் .ஆனால் காவல்துறை எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக உள்ளது. இதே நிலை நீடித்தால் மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சி திமுக கவுன்சிலரை கண்டித்து மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது .மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். திமுக கவுன்சிலர்கள் அராஜக போக்கை கைவிட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்..ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயவேல், குமார், வினோத்குமார், விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் வாலிபால் செந்தில்குமார், மகளிரணி மாவட்ட தலைவி தனலெட்சுமி, மண்டல் தலைவர் கள் அருண்குமார், பாலமுருகன், 41வதுவார்டு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், வார்டு தலைவி செல்வி கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லப்பாண்டி, முன்னாள் கவுன்சிலர் பாலயோகி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்..