Sunday , February 1 2026
Breaking News
Home / இந்தியா / நீங்கியது தடை – ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டி
NKBB Technologies

நீங்கியது தடை – ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டி

இலங்கையில் அதிபர் தேர்தல் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியான இவர், ராஜபக்சே கட்சியின் வேட்பாளராக மனுதாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையே, அவர் இலங்கை குடிமகன் அல்ல, அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்றும், அவரது இலங்கை குடியுரிமை சான்றிதழ் போலியாக உருவாக்கப்பட்டதாகவும் இலங்கை மேல்முறையீட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இலங்கை அரசியல் சட்டப்படி, அந்நாட்டு குடிமகன் மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். கோத்தபய, தேர்தலில் போட்டியிட தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை பரிசீலித்த இலங்கை கோர்ட், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இதையடுத்து, இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயே ராஜபக்சே போட்டியிடுவதில் இருந்த சிக்கல் நீங்கியது.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES