Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் / உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு திருச்சி அப்போலோ மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.!
MyHoster

உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு திருச்சி அப்போலோ மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

இந்திய அளவில் தேசிய உடல் உறுப்பு தான தினம் ஒவ்வொரு ஆண்டும்  நவம்பர் 27ல் கொண்டாடபட்டு வருகின்றது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து, நாடு முழுவதும் உடல்உறுப்புகளை தானமாக பெறுவதற்காக 5 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் 100 நபர்கள் தங்களின் உடல் உறுப்புகளை தானம் அளிப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் அளித்த கொடையாளர்கள் மற்றும் உறுப்பு தானம் பெற்ற நபர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


இம்மருத்துவமனை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மருத்துவமனையின் Dr. வேல் அரவிந்த் – மூத்த சிறப்பு சிறுநீரக சிகிச்சை நிபுணர் மற்றும் Dr. C. அழகப்பன் – மூத்த சிறப்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோரால் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக மாற்று அறுவை சிகிச்சையில் கொடையாளர்களுக்கு லேபராஸ்கோபிக் டோனர் நெஃப்ரெக்டோமி (Laparascopic DOnor Nephrectomy) முறைப்படி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் கொடையாளர்கள்  துரிதமாக உடல்நிலை தேறி இயல்புநிலைக்கு திரும்ப ஏதுசெய்கிறது. இம்முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் மிகுந்த அனுபவம் மற்றும் உட்கட்டமைப்பு வசதி அவசியம் இதனை திருச்சி அப்போலோ மருத்துவமனை கொண்டுள்ளது என
Dr. வேல் அரவிந்த், சிறுநீரக மாற்று மருத்துவ சிகிச்சை நிபுணர் கூறினார் அனைவரும் தங்கள் இறப்பிற்கு பின்பாவது  உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

Dr. C. அழகப்பன் – மூத்த சிறப்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், Dr. சிவம் ,நிலைய மருத்துவ அதிகாரி உடன் இருந்தனர்.  

மருத்துவமனை மூத்த பொதுமேலாளர் சாமுவேல்  அவர்கள் மருத்துவர்களை பாராட்டியதுடன் கொடையாளர்கள் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு நபர்களுக்கு பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்

பொதுமேலாளர் சங்கீத், விற்பனை பிரிவு பொதுமேலாளர் மணிகண்டன் மற்றும் முதன்மை மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன் உடன் இருந்தனர்.  

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES