எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்ட பொதுக்கைகுயானைக்கல் பகுதியில் உள்ள ஹோட்டல் பிரசிடென்ட்ல் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு
மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் சிராஜ்தீன் வரவேற்புரையும்,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகமது யூசுப் தொகுப்புரையும்,
மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையுரையும் நிகழ்த்தினார்கள்.
மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது கடந்த ஒரு ஆண்டிற்கான அறிக்கையை சமர்ப்பித்தார்.
மாநில செயலாளர் நஜ்மா பேகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும்
SDTU மாநில துணைத் தலைவர் அப்துல் சிக்கந்தர்,
SDTU மாநில செயற்குழு உறுப்பினர் சத்ய மூர்த்தி,
வழக்கறிஞர் அணி மண்டல தலைவர் வழக்கறிஞர் பஷீர்,
WIM மாநில செயற்குழு உறுப்பினர் கதிஜா
உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
1) சென்னை போன்ற நகரங்களில் கடந்து சென்ற மழை காலங்களில் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் நிகழ்வுகளில் சிறப்புற கையாண்டு சீரிய செயலாற்றிய மாண்புமிகு மாநில முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
2) மதுரை சாலைகள் குறிப்பாக நகரின் பிரதான பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. ஆகவே உடனடியாக சரி செய்து தர மதுரை மாவட்ட அரசு நிர்வாகத்தை கேட்டு கொள்கிறோம்.
3) மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
4)மழை காலத்தில் பெரியார் பேருந்து நிலைய பகுதியில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கு உண்டான உரிய செயல் திட்டங்களை வகுத்து தீர்வு காண வேண்டும்.
5)மதுரையில் கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகள் மாணவர்களிடம் மிகவும் சுலபமாக கிடைக்கும் அவல நிலை உள்ளது. இக்கொடிய பழக்கத்தினால் சமூக சீர்கேடு மற்றும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக இரும்பு கரம் கொண்டு அடக்கி நம் நாட்டின் வருங்கால தூண்களை வளமான தலைமுறைகளாக காத்திட வேண்டும்.
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக மாவட்ட பொருளாளர் சிக்கந்தர் நன்றியுரை கூறினார்.