Thursday , November 21 2024
Breaking News
Home / அறிவியல் / லைசென்ஸும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்…போலீசும் அபராதம் விதிக்கமாட்டாங்க..சூப்பர் இ-பைக் அறிமுகம்!
MyHoster

லைசென்ஸும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்…போலீசும் அபராதம் விதிக்கமாட்டாங்க..சூப்பர் இ-பைக் அறிமுகம்!

பெனெல்லி லியோன்சினோ 250 பைக் அறிமுகம்!

இந்த இ-பைக்கில் பயணிப்பதற்கு ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் என எதையுமே வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் அறிமுகமானது சூப்பர் இ-பைக். கூடுதல் தகவலை கீழே காணலாம்.

குஜராத் மாநிலம், அஹமதாபாத் நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன தயாரிப்பு நிறுவனமான கிரீன்வோல்ட் மொபிலிட்டி நிறுவனம், அதன் புத்தம் புதிய மின்சார வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த நிறுவனம் தயாரிக்கும் இ-பைக்குகள் குறைந்த செலவில் நிறைந்த பலனளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.அந்தவகையில், அதன் முதல் மாடலான மண்டிஸ் இ-பைக்கை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த இ-பைக்கின் உற்பத்தியை கடந்த மூன்று வருடங்களாக இந்நிறுவனம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இதற்கு அராய் அமைப்பு கடந்த 2018ம் ஆண்டுதான் ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து விற்பனையில் இறங்கும் விதமான முயற்சியில் கிரீன்வோல்ட் மொபிலிட்டி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், அதற்கு சொந்தமான ஷோரூம்களில் மட்டுமே தற்போது விற்பனைக்காக இ-பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இதோடு நிறுத்திக்கொள்ளாமல், நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இ-பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டம் தீட்டி வருகின்றது.

இந்த இ-பைக்கானது மொபட் மற்றும் பிரீமியம் மிதிவண்டி ரகத்தில் காட்சியளிக்கின்றது. இதில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் அனைத்தும் பார்ப்பவர்களை உடனே கவரும் வகையில் இருக்கின்றது. அந்தவகையில், கூடுதல் வசதியான அமைப்புடைய இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இது, மற்ற இ-சைக்கிள்களில் காணப்படுவதை சற்று வித்தியாசமாக காணப்படுகின்றது.

இந்த இ-பைக்கை வாகன துறை சார்ந்த வல்லுநர்கள் ‘நோ செல்லாண்’ என்று கூறுகின்றனர். இதற்கு காரணம் இருக்கின்றது. ஏனென்றால், இந்த இ-பைக்கச் சாலையில் இயக்க ஹெல்மெட், பதிவெண் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆகையால், இதனை வாங்கும் உரிமையாளர்கள் சாலையில் போலீஸார் மடக்குவார்கள் என அஞ்ச தேவையில்லை.

அதேசமயம், நாம் என்னதான் சரியாக சாலை சென்றாலும், எதிரில் வருபவர்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில், நமக்குதான் ஆபத்து. ஆகையால், பாதுகாப்பு அம்சங்களை அணிவது சால சிறந்தது.

மண்டிஸ் இ-பைக் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது.

Bala Trust

About Admin

Check Also

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…

Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES