Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!
NKBB Technologies

மதுரையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பால் விலை, சொத்து வரி குடிநீர் வரி மற்றும் மின் கட்டணம் உயர்வை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மதுரை மாநகர் – புறநகர் சார்பில், புறநகர் மாவட்ட செயலாளர் நாகஜோதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் மணிமேகலை, மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் மாவட்ட செயலாளருமான இராஜலெட்சுமி கண்டன உரை ஆற்றினர்.

மேலும், ஏஜடியூசி மாவட்ட துணைச் செயலாளர் தாமஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ் முருகன், புறநகர் மாவட்ட செயலாளர் பி.முத்துவேல் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினர்.

மாநில குழு உறுப்பினரும் மாவட்ட தலைவருமான கற்பக வள்ளி, பொருளாளர் ஜாகீர் நிஷா, மாதர் உறுப்பினர்கள், நிர்வாகிகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES