Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற உள்ள முப்பெரும் விழா குறித்த ஆலோசனை கூட்டம்.!
NKBB Technologies

தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற உள்ள முப்பெரும் விழா குறித்த ஆலோசனை கூட்டம்.!

தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக மதுரையில் நடைபெற உள்ள முப்பெரும் விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு விழா, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 75-வது பொன்விழா, மற்றும் சங்கத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஜனவரி 5-ஆம் தேதி அன்று மதுரை காந்தி மியூசியத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சன் டிவி, விஜய் டிவி காமெடி நடிகர்கள் பங்கேற்கும் மதுரையை கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் சங்கத்தின் மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.


மேலும் துணை நடிகர், நடிகைகளுக்கு சங்கத்தின் மாநில தலைவர் பன்னீர்செல்வம் அடையாள அட்டை மற்றும் நியமன சான்றிதழ்களை வழங்கினார்.


இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தேசிய மனித உரிமை கழகத்தின் மதுரை வடக்கு மாவட்ட தலைவரும், திரைப்பட நடிகருமான வி.பி.ஆர் செல்வகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதில் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் இருதயராஜ், பழனிச்சாமி, அய்யனார், குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகன், பன்னீர்செல்வம், தகவல் மற்றும் செய்தி தொடர்பாளர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு…!

மதுரையைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு சென்னை ஜூலை 28 சென்னையில் சன்மார்க் சமூக கல்வி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES