Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கும், சாலையோர வாசிகளுக்கும் உணவு வழங்கி வரும் மதுரை அட்சய பாத்திரம் நிறுவனத்திற்கு குவியும் பாராட்டு.!
NKBB Technologies

மதுரையில் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கும், சாலையோர வாசிகளுக்கும் உணவு வழங்கி வரும் மதுரை அட்சய பாத்திரம் நிறுவனத்திற்கு குவியும் பாராட்டு.!

மதுரையில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கும், சாலையோர வாசிகளுக்கும் உணவு வழங்கி வரும் மதுரை அட்சய பாத்திரம் நிறுவனத்திற்கு குவியும் பாராட்டுக்கள்
மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் கொரோனா நோய்தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து சாலையோர வாசிகள் மற்றும் வறியோருக்கு, இயலாதோருக்கு மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு தினமும் உணவு வழங்கி வருகிறார்.
தினமும் பசியால் வாடி நிற்கும் சாலையோர வாசிகளை கண்ட இவர் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்த நிலையிலும் தினமும் உணவு வழங்கின்றார். இன்றுடன்
580 நாள் நிறைவடைந்த இந்நாளில்
கார்த்திகை தீப திருவிழா என்பதால்பூங்கா முருகன் கோவில் வந்த பக்தர்களுக்கும், சாலையோ வாசிகளுக்கும், மதுரை ராஜாஜி மருத்துவமனை ஒருங்கிணைந்த குழந்தைகள் நல பிரிவின் அருகே நோயாளிகளின் உறவினர்களுக்கும் உணவினை வழங்கினார்.

அட்சய பாத்திர டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு கூறும்போது உலகத்தில் மனதிற்கு இன்பம் அளிப்பது கொடுப்பதில் தான் இருக்கிறது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அந்த வகையில் மதுரையின் அட்சய பாத்திரம் மூலம் வறியவர்களுக்கும், மனநலம் பாதித்தவர்களுக்கும் சாலையோர வாசிகளுக்கும் தொடர்ச்சியாக 580 நாட்களுக்கும் மேலாக மதிய உணவு வழங்கிறோம் என்றும், இன்று கார்த்திகை திருவிழா என்பதால் கோவில் கொண்ட பக்தர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது என்றும், இந்த அட்சய பாத்திரம். தொடர்ந்து உணவு தானம் வழங்கிட தொழிலதிபர்கள், நிறுவனர்கள், மேலாளர்கள், அலுவலர்கள் உதவ வேண்டும் என்றார்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு…!

மதுரையைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு சென்னை ஜூலை 28 சென்னையில் சன்மார்க் சமூக கல்வி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES