Saturday , January 31 2026
Breaking News
Home / ஆன்மீகம் / பரிகாரம் என்று நாம் செய்து நமது விதியை மாற்ற முடியும் என்றால்?….
NKBB Technologies

பரிகாரம் என்று நாம் செய்து நமது விதியை மாற்ற முடியும் என்றால்?….

என்னிடம் ஜோதிட ஆலோசனை கேட்கும் நன்பர்கள் அதிகமாக பிரச்சினைக்கு தீர்வு எதாவது உண்டா என்று கேட்கிறார்கள்..

பரிகாரம் என்று நாம் செய்து நமது விதியை மாற்ற முடியும் என்றால்..

ஜாதகத்தில் உள்ள கட்டங்களில் மாற்றம் வந்து விடுமா என்ன???

நம் வாழ்க்கையில் வரும் அனைத்து கஷ்டங்கள் மற்றும் பிரச்சினைகளும் … நம் வாழ்வை அடுத்த நிலைகளுக்கு எடுத்து செல்கிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா???

ஆனால் நம் மனது இந்த பிரச்சினை மற்றும் சிக்கல்கள் முடிந்த பின்னும் அதையே நினைத்து நினைத்து வருத்தம் அடைகிறது..

காரணம் நம்முடைய சிந்தனை மாற்றத்தை ஏற்க நாம் தயாராக இல்லை..! நம்முடைய காலில் சங்கிலி போட்டு முந்தைய சிந்தனை மூட்டை என்ற கல்லையும் கட்டிகொண்டு ஓட முயற்சி செய்கிறோம்.. இதெல்லாம் எப்படி சாத்தியம் ??..

வெங்காயம் உரித்து கொண்டு உள்ளே விதையை தேடுவது போல.. தீர்வை தேடுவது புதிய சிக்கல்களை கொடுக்குமே தவிர.. தீர்வை தராது.

உங்கள் அருகில் இருக்கும்… கண்ணுக்கு தெரிந்த பசியில் இருக்கும் மனிதர்களுக்கு உணவு தர மனமில்லாமல்…

இறைவன் எதையும் மனிதனிடம் எதிர்பார்பது இல்லை..அவர் உன் வாழ்க்கை போகும் போதே நல்ல செயல்களையும் செய்து விட்டு போ என்கிறார்…

இறைவனுக்கு அனைத்தும் படைத்து நம்முடைய பிரச்சினை சரிசெய்ய முடியும் என்பது இல்லை..

ஒரு வேலை பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பது உண்மையான இறைதன்மை.. இல்லையா???

அதனால் ஒரு வேலை நீங்கள் உங்கள் வாழ்க்கை பிரச்சினைக்கு தீர்வை தேடும் நபராக இருந்தால்…

பசித்தவர்களுக்கு உணவு கொடுங்கள்… இறைவன் உங்கள் தேவை பசியையும் அறிந்து உதவி செய்வார்..

#ராஜநாடி
#rajanadidrsathish

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES