குளித்தலையில் கடந்த ஓராண்டாக இந்த கழிவுநீர் சாக்கடை மேலே( அதாவது 18 கிளை வாய்க்கால்களில்ஒன்று) நகராட்சி இடத்தில் யார் வேண்டுமானாலும் கடை நடத்திக் கொள்ளலாம் போல. குளித்தலையை பொறுத்தவரை கமிசன் கொடுத்து தான் அந்த கடை நகராட்சியால் அனுமதிக்கப்பட்டு நடத்தப்படுகிறது என தகவல். இனியாவது பொறுப்பு ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோளாக வைக்கிறோம். இந்த நகராட்சி சம்பந்தமாக மின்சாரம்,குடிநீர்,சாக்கடை,குப்பைகளை அகற்றுதல் என 24 வார்டுகளிலும் பிரச்சனை இருப்பின் அதை புகைப்படம் எடுத்து பதிவிட்டால் உடனடியாக அல்லது நகராட்சி துப்புரவுபணியாளர்கள் பற்றாக்குறையை பொறுத்து இரண்டொரு நாட்களில் தீர்வு காணப்படும் ஆனால் இந்த சாக்கடைமேல் கடை வைத்து உணவகம் நடத்திவரும் இவருக்கு நகராட்சியால் இவ்வளவு அந்தஸ்து இருப்பதை பார்த்தால் பணம் பாதாளம் வரை பாயும் என்பதற்கு இதுவே ஒரு மிகப்பெரிய உதாரணம் இதனை ஒரு வாரத்திற்குள் தீர்வு கிடைக்கும்படி ஆணையர் அவர் கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லாவிட்டால் நகராட்சி முன் இளைஞர்அமைப்பினர்,இதர அனைத்து கட்சியினர்,மற்றும் தமிழ்நாடு இளைஞர்கட்சி பொதுமக்களை திரட்டி கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கடம்பை பிரபு. குளித்தலை நகர செயலாளர். (தமிழ்நாடு இளைஞர் கட்சி ) கோரிக்கைக்கு இணங்க பணி செயல்படுத்தப்பட்டது.
இதில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் குளித்தலை நகர செயலாளர் திரு.கடம்பை பிரபு அவர்களின் பங்களிப்பானது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் இணைந்து செயல்பட்ட நண்பர்கள் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு அளித்த பல்வேறு கட்சி நிர்வாகிகள் அனைவரையும் பாராட்டுவதாகவும் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநில துணை செயலாளர் திரு.க.முகமது அலி அவர்கள் அறிவித்தார்.
https://m.facebook.com/100041662340405/videos/138765510855526/