Wednesday , December 17 2025
Breaking News
Home / கல்வி / அரசு துவக்கப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா
NKBB Technologies

அரசு துவக்கப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா

அரசு துவக்கப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா

ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன், அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பகம் இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு தலைப்பில் கட்டுரை போட்டியும், அப்துல்கலாமும் விஞ்ஞானமும் தலைப்பில் பேச்சுப்போட்டியும், ராக்கெட் ஓவியப் போட்டியும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அப்துல் கலாம் பொன்மொழிகள் அடங்கிய ஆங்கிலம், தமிழ் நூல்கள்
ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன் செயலாளர் கணக்குத் தணிக்கையாளர் ராய் ஜான் தாமஸ் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டது. மணிகண்ட வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் முன்னிலை வகித்தார். திருச்சிராப்பள்ளி வருமான வரித்துறை துணை ஆணையர் ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பக நிர்வாக அறங்காவலர் முத்துச்செல்வி நோக்க உரையாற்றினார். ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிடன் தலைவர் அருமை ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் , பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மணிவண்ணன், லில்லி ஜெயராணி ,முகமது அலி ஜின்னா, இயற்கை நலவாழ்வியல் ஆலோசகரும், யோகா ஆசிரியருமான விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி வரவேற்க, இடைநிலை ஆசிரியர் புஷ்பலதா நன்றி கூறினார் .அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பக அறங்காவலர் ஜெயந்தி நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்திருந்தார்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES