Saturday , January 31 2026
Breaking News
Home / சமூக சேவை / கல்வி மாவட்ட அளவில் சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பெற்ற துவக்கப்பள்ளி மாணவர்க்கு பாராட்டு விழா
NKBB Technologies

கல்வி மாவட்ட அளவில் சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பெற்ற துவக்கப்பள்ளி மாணவர்க்கு பாராட்டு விழா

கல்வி மாவட்ட அளவில் சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பெற்ற துவக்கப்பள்ளி மாணவர்க்கு பாராட்டு விழா

ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன், அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பகம் இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் நான்காம் வகுப்பு பயிலும் மாணவன் மித்ரன் திருச்சி
கல்வி மாவட்ட அளவில் 11 வயதிற்குட்பட்ட பிரிவு சதுரங்க போட்டியில் இரண்டாமிடம் பெற்றதை முன்னிட்டு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன் செயலாளர் கணக்குத் தணிக்கையாளர் ராய் ஜான் தாமஸ் தலைமை வகித்தார்.மணிகண்ட வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் முன்னிலை வகித்தார். திருச்சிராப்பள்ளி வருமான வரித்துறை துணை ஆணையர் ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பக நிர்வாக அறங்காவலர் முத்துச்செல்வி நோக்க உரையாற்றினார். ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிடன் தலைவர் அருமை ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் , பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மணிவண்ணன், லில்லி ஜெயராணி ,முகமது அலி ஜின்னா, இயற்கை நலவாழ்வியல் ஆலோசகரும், யோகா ஆசிரியருமான விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி வரவேற்க, இடைநிலை ஆசிரியர் புஷ்பலதா நன்றி கூறினார் .அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பக அறங்காவலர் ஜெயந்தி நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்திருந்தார்.

 

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES