கரூர் மாவட்டம் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் கொண்ட மக்களின் மனுக்கள் பெற்று இன்று மனுதாரர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் அவற்றை சரி செய்யும் முறைகளையும் எளிதாக்க மேலதிகாரிகள் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இதில் மனுதாரரின் கோரிக்கைக்கு நேரிடையாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதிலளித்தனர்.
பல கோரிக்கைகள் கூட்டத்திலேயே சரி செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது மற்றும் பல கோரிக்கைகள் தங்களது துறை சார்ந்தது அல்ல என பதில் அளித்தார்கள்.
அவ்வாறு மாற்று துறைக்கு அளிக்கப்பட்ட கோரிக்கைகளும் அங்கனமே ஏற்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட மக்கள் விசாரிக்கப்பட்டனர் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
விவசாயிகளின் அழைப்பை ஏற்று தமிழ்நாடு இளைஞர் கட்சியைச் சார்ந்த மாநில துணைச்செயலாளர் திரு முகமது அலி மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் திரு பாலமுருகன், கரூர் மாவட்ட செயலாளர் திரு அபுல் ஹஸன், கரூர் மாவட்ட சமூக ஊடகத் துறை தலைவர் திரு ஆண்டனி மற்றும் கரூர் நகர தலைவர் திரு சபீர் அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது என கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மக்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர் திரு ராஜ்குமார் அவர்கள் தெரிவித்தார்.