Monday , March 23 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்க ஜெயந்தி விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.!
NKBB Technologies

மதுரையில் தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்க ஜெயந்தி விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.!

மதுரையில் தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் சார்பாக விஸ்வகர்மா ஜெயந்தி விழா மற்றும் டாக்டர் பி.எஸ்.நாதன் 101 வது பிறந்தநாள் விழா, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாநிலத் தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பொன்ராஜ், இணைச்செயலாளர் சங்கரன், இணை பொதுச்செயலாளர் பேச்சியப்பன் மற்றும் பொள்ளாச்சி ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஸ்ரீ விஸ்வகர்ம ஜகத்குரு ஸ்ரீ லஸ்ரீ பாபுஜி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவன தலைவர் திருமாறன்ஜி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பொருளாளர் எஸ்.வி.கே.ஆறுமுகம் மற்றும் கந்தசாமி, லட்சுமி காந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES