தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக மதுரையில் உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக மதுரை கோச்சடையில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
பணியிட மாறுதல்களை பதவி உயர்வு மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்த வேண்டும்.
நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் மாநகர சுகாதார செவிலியர்களை பகுதி சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
பணி ஓய்வு பெறும் நாளில் பண பயன்களை வழங்கிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
நிர்வாகிகள் பேசினர்.
இந்நிகழ்விற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.டி துரைக்கண்ணன் தலைமை தாங்கினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார். பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் கே.கண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
இதில் பரமசிவன், ராஜூ, பாண்டிச்செல்வி, ரவிச்சந்திரன், பரமேஸ்வரி, இரா.தமிழ், கிருஷ்ணன் சின்னப்பாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முடிவில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் முருகையன் நிறைவுறை கூறினார்.
இப்போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.