உளுந்தூர்பேட்டை அருகே தாலிக்கு தங்கம் கொடுக்கும் நிகழ்ச்சியில் விழப்புரம் மாவட்டத்தில் 51,357 பயனாளிகளுக்கு ரூ.212 கோடி மதிப்பிள் தங்கம் வழங்கப்பட்டது என்று சட்டத்துறை அமைச்சர் பேச்சு:
விழுப்புரம் அருகே உள்ள அரசூர் தனியார் கல்லூரியில் சமுக நலத்துறையின் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவிழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சிவி.சண்முகம் அவர்கள் கலந்துகொண்டு பேசுகையில் இதுவரை 51,357 பயனாளிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் மொத்தம் 212கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும்
இன்று 2320 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் 16 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்று பேசினார் பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் உறுப்பினர் இரா.குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் உறுப்பினர் பிரபு , தமிழ்நாடு சர்க்கரை ஆலை இணையதலைவர் ராஜசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.