Tuesday , December 3 2024
Breaking News
Home / தமிழகம் / விஷவண்டு தாக்கி உயிரிழந்த புதுவை மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.
MyHoster

விஷவண்டு தாக்கி உயிரிழந்த புதுவை மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.

விஷவண்டு தாக்கி உயிரிழந்த புதுவை மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.

புதுவை மாநில அதிமுக செயலாளராக இருந்து வந்த புருஷோத்தமன் நேற்று விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் பகுதியில் இருந்த தனது நிலத்தை பார்வையிட சென்றபோது விஷ வண்டு தாக்கி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வைக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இருந்த புருஷோத்தமன் உடலுக்கு தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று நண்பகல் 12.00 மணி அளவில் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

அவருடன் தொழில்துறை அமைச்சர் எம். சி. சம்பத் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விக்ரவண்டி எம்எல்ஏ முத்தமிழ்ச் செல்வன் மற்றும் தமிழக புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.,

மறைந்த புருஷோத்தமன் பழகுவதற்கு எளிமையானவர் என்றும், அவரது இழப்பு அதிமுகவிற்கு பேரிழப்பு என்று கூறினார். மேலும் புருஷோத்தமன் இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கழக நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

இதைதொடர்ந்து புருஷோத்தமன் உடல் அவரது சொந்த ஊரான புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தில் எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு பின் அடக்கம் செய்யப்பட உள்ளது.

 

Bala Trust

About Admin

Check Also

அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக கரூர் விஷன் 2030 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்….

வணக்கம்..! அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக President செந்தில் விஷ்ணு ராம், CII அமைப்பு சார்ந்த சேர்மன், கோ சேர்மன், …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES