சென்னை: 161 படி ஆளுநர் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம். அவருக்கு இந்த அவசியம் உள்ளது.
பேரறிவாளன் விடுதலையில் இதுதான் நடந்தது. ஆளுநர் இதை செய்ய வில்லை என்றால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர். என் ரவி மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர். என் ரவியின் செயல்பாட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக வழக்கு தொடுத்துள்ளது. ஆளுநருக்கு உடனே உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தமிழக சட்ட சபை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தாமதம் உள்ளது.. இதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. ஆளுநருக்கு எதிராக ஆளும் திமுக கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.
பேட்டி; இது தொடர்பாக பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஆளுநர் எப்போதும் மாநில அரசின் உரிமைகளை மட்டுமே செயல்படுத்த முடியும். மாநில அரசின் கோரிக்கைளை மட்டுமே.. அவர்களின் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். கண்டிப்பாக இந்த வழக்கு விவாதத்தை ஏற்படுத்தும். இது தேசிய அளவில் மாற்றங்களை கூட ஏற்படுத்தலாம். விவாதங்களை ஏற்படுத்தலாம். அதனால் மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அப்படிதான் ஆளுநருக்கு லாக் வைக்க திமுக பார்க்கிறது. ஒரு ஆளுநருக்கு என்று இல்லாமல் நாடு முழுக்க எல்லா ஆளுநருக்கும் எதிராக இந்த வழக்கு மாறலாம்.
(இம்சை தாங்கல.. பொறுத்தது போதும்னு பொங்கி எழுந்த ஸ்டாலின்.. ஆளுநர் ரவிக்கு சிக்கல்? என்ன நடக்குது?)
161 படி ஆளுநர் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம். அவருக்கு இந்த அவசியம் உள்ளது. பேரறிவாளன் விடுதலையில் இதுதான் நடந்தது. ஆளுநர் இதை செய்ய வில்லை என்றால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டும். திமுகவின் மனுவில் ஆளுநருக்கு எதிராக முக்கியமான சில கோரிக்கைகள் இருக்கும். இதில் ஒரு சில கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும் கூட அது ஆளுநருக்கு எதிரான மோதலில் மிகப்பெரிய வெற்றியாக மாறும்.
தேசிய அளவில் சிக்கல்: தேசிய அளவில் ஆளுநரை வைத்து மோசமான அரசியல் செய்யும் பாஜகவிற்கு பெரிய அடியாக மாறும். எதிர்கட்சிகளை திட்டமிட்டு மோடி அரசு கழுத்தை நெரிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் வழக்கு போட்டுள்ளனர் . இந்த போக்கு தொடர்வது இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குழி தோண்டி புதைக்கும் செயலை மத்திய அரசு செய்கிறது. இதை விடக்கூடாது என்று இவர்கள் ஜெயிலுக்கு சென்றுள்ளனர். ஏற்கனவே பஞ்சாப்பில் இது தொடர்பாக வழக்கு தொடுத்தனர். இப்போது மீண்டும் வழக்கு தொடுத்துள்ளார். இப்போது தமிழ்நாட்டிலும் வழக்கு தொடுத்துள்ளனர்.
இது கண்டிப்பாக பாஜகவிற்கு எதிராக பெரிய பிரஷர் கொடுக்கும். ஆளுநர் இங்கே பாஜகவிற்கு பெயரை கெடுகிறார். ஆனால் அதை பற்றி பாஜகவிற்கு கவலை இல்லை. இங்கே திமுக அரசை எவ்வளவு சீர்குலைக்க முடியுமோ அவ்வளவு முயலுங்கள் என்று பாஜக கூறி உள்ளது. இங்கே 5 சதவிகித வாக்குகள் உள்ளன. அது 3 சதவிகித வாக்குகள் ஆக குறைந்தால் கூட பரவாயில்ல்லை. தமிழ்நாட்டில் வெல்ல முடியாது, தமிழ்நாட்டில் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்துங்கள் என்று ஆளுநர் ஆர். என் ரவியை அனுப்பி வைத்துள்ளனர், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.