இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் நிறுவனம் மற்றும் பெட்கிராட் தொழில் பயிற்சி பள்ளி இணைந்து இலவச ஜூட் பேக் தயாரிக்கும் பயிற்சி மதுரை பீ.பீ.குளம் பகுதியில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் அவர்களின் தலைமையிலும், தலைவர் கிருஷ்ணவேணி, பயிற்சியாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். மாமன்ற உறுப்பினர் முரளி கணேஷ் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து அவர் பேசுகையில் :- பகுதி மக்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், சுய தொழில் துவங்க தேவையான அனைத்து உதவிகளையும் தான் செய்து தருவதாக பேசினார்.
மதுரை மாவட்ட தொழில் மைய உதவி பொது மேலாளர் ஜெயா பேசுகையில், தொழில் தெரிந்தவர்கள் மத்திய மாநில அரசுகள் மானியத்துடன் வழங்கும் வங்கி கடனை பெற்று வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என கூறினார்.
இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் பேசுகையில் :- தொழில் முனைவோராக மாறுவதற்கு உங்களின் விடாமுயற்சியும், ஆர்வமும் முக்கியம். தயாரித்த பொருட்களை விற்பனை செய்யவும் விற்பனை கூடம் மற்றும் கண்காட்சி அமைக்கவும் வழிவகை செய்யப்படும்என பேசினார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் தங்கமலர் பேசுகையில் மானியத்துடன் வங்கி கடன் பெறுவது தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது எனவே சிறப்பாக பயிற்சியை முடிக்க வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.