மதுரை அன்சாரி நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவக் கழிவுகள் சேகரிப்பு மையத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடங்கி வைத்தார்.
உயிரியல் கழிவு மேலாண்மை விதிகள் 2016-இன்படி அனைத்து சுகாதார மையங்களிலும் உயிரியல் கழிவுகள் சேமிப்பு அமைத்துப் பயன்படுத்த வேண் டும். சுகாதார மையங்களில் உற் பத்தியாகும் உயிரியல் மருத்துவக் கழிவுகளைச் சேமித்து வைத்து 48 மணி நேரத்துக்குள் அதை அகற்றும் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
உற்பத்தியாகும் உயிரியல் மருத்துவக் கழிவுகளை மஞ்சள், சிகப்பு, நீலம், வெள்ளை என்று நான்கு வகைப்படுத்தி சேமித்து அகற்றப்பட வேண்டும். இவ்வாறு வகைப்படுத்தி அகற்றும் போது, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
இந்த உயிரியல் கழிவுகள் சேமிப்பு அறை மதுரை மாவட்டத்தில் 6 நகர்ப்புற ஆரம்ப சுகாதார
மையங்களில் (நகர்ப்புறம் 3, கிராமப்புறம் 3) தனியார் நிறுவ னமான முத்தூட் நிதி நிறுவனத்தின் சமூக பங்களிப்புத் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக, மதுரை மாநகராட்சி அன்சாரி நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், ரூ.50 ஆயிரத்தில் அமைக் கப்பட்ட மருத்துவக் கழிவுகள் சேகரிக்கும் மையத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மண்டல மருத்துவ அலுவலர் ராம்மோகன், மாவட்ட நிர்ணய மருத்துவ அலுவலர் பொன்.பார்த்திபன், முத்தூட் பைனான்ஸ் சி.எஸ்.ஆர் மேலாளர் ஜெயக்குமார் மற்றும் விஜயகுமார், மருத்துவ அலுவலர் ஷோபனா, சுகாதார ஆய்வாளர் கவிதா மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.