Wednesday , July 30 2025
Breaking News
Home / சினிமா / சினிமா – விஜய் படத்தில் நடிக்கும் பாடகி
NKBB Technologies

சினிமா – விஜய் படத்தில் நடிக்கும் பாடகி

விஜய் நடித்து தீபாவளிக்கு வந்த பிகில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

பேராசிரியர் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் நீட் தேர்வுக்கு பலியான மாணவி அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. அங்கு காற்று மாசு காரணமாக படப்பிடிப்பில் தடங்கல்கள் ஏற்பட்டன. தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்தவர். இன்னொரு நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். நடிகை கவுரி கிஷானையும் படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். அவர் கூறும்போது, “விஜய்யுடன் நடிப்பது மகிழ்ச்சி. அனைவருடைய ஆசீர்வாதத்தால் இதில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.

இவர் விஜய் சேதுபதி-திரிஷா நடித்த ‘96’ படத்தில் இளம்வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தற்போது டெலிவிஷன் நடிகையும், பாடகியுமான சவுந்தர்யா நந்தகுமாரையும் விஜய் நடிக்கும் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் பகல் நிலவு தொடரில் நடித்து பிரபலமானவர். சாந்தனு, வர்கீஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

Bala Trust

About Admin

Check Also

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES