Sunday , January 19 2025
Breaking News
Home / இந்தியா / தமிழக மக்களே…பணப்புழக்கம். ஏன் இங்கு இல்லை???
MyHoster

தமிழக மக்களே…பணப்புழக்கம். ஏன் இங்கு இல்லை???

தமிழக மக்களே…பணப்புழக்கம்.
ஏன் இங்கு இல்லை???

மாதாமாதம் வீட்டுக்கு 10,000 (பத்தாயிரம்) அனுப்புகிறேன் என்று அந்த வடமாநிலத்துத் தொழிலாளி சொன்னான். அப்படியா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன்…
வந்தபின்தான் யோசித்தேன்… இந்த ஒருவன் மாதம் 10,000 அனுப்புகிறான்… இப்படி 10 பேர் அனுப்பினால் 1 லட்சம்… 100 பேர் அனுப்பினால் 1 கோடி… 1,000 பேர் அனுப்பினால் 10 கோடி… 1 லட்சம் பேர் அனுப்பினால் 1,000 கோடி.
மனம் அய்யய்யோ என்று அதிர்ச்சியடைந்தது! முதலில் இவனின் கூட்டம் தமிழகத்தில் எவ்வளவு இருக்கிறது என குத்து மதிப்பாய் கணக்கு எடுப்போம் என தொடங்கினேன்.
தொழில் நகரங்களான பெரும் நகரங்களில் மாவட்ட அளவில் உதாரணத்திற்கு திருப்பூரில் 3 லட்சம் பேரும், கோவையில் 7 ஏழு லட்சம் பேரும், சென்னையில் 20 லட்சம் பேரும் இருக்கிறார்கள் என சொன்னார்கள். அப்போ சேலம், ஈரோடு போன்ற இன்ன பிற மாவட்டங்களில் எவ்வளவோ தெரியாது என்றார்கள். அதிர்ச்சியில் உறைந்துபோனேன்…
சென்னை, கோவை, திருப்பூர் மட்டும் கனக்கில் எடுத்துக் கொள்வோம் என முடிவெடுத்து கணக்கு பார்த்தேன், மொத்தம் 30 லட்சம் பேர். ஒருவன் மாதம் 10,000 என்றால் 30 லட்சம் பேருக்கு கணக்கு போட்டேன். 3,000 கோடி எனக் காட்டிவிட்டு கால்குலேட்டரே தன்னை காலாவதியாக்கிக் கொண்டது.
மாதம் மாதம் 3,000 கோடி என்றால் வருடத்திற்கு 36,000 கோடி. தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்து கொண்டு தமிழக மக்களையும், சிறு, குறு பெரும் வியாபாரிகளையும் வளமாக வாழ வைக்க வேண்டிய இந்தப்பணம் வடமாநிலங்களில் புழங்கிக் கொண்டுருக்கிறது. அங்கே இருக்கும் மக்களையும் சிறு, குறு, பெரும் வியாபாரிகளை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
இது தமிழகத்தின் வெறும் 3 மாவட்டக் கணக்கு மட்டுமே. மீதம் இருக்கும் 36 மாவட்டங்களிலும், வடமாநில தொழிலாளிகளை கணக்கெடுத்து கூட்டிப் பார்த்தால் தலை சுத்தி மயக்கம் போட்டு மூர்ச்சையாகி இறந்தாலும் இறந்து விடுவோம்.
இது வடமாநில கடைநிலைத் தொழிலாளர்கள் கணக்கு மட்டுமே. இன்னும் வடமாநில சுய தொழில் செய்யும் வியாபாரிகள், முதலாளிகள் போன்றோர்களை கணக்கெடுத்து அவர்கள் ஈட்டும் வருமானங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால்…
சத்தமின்றி யுத்தமின்றி தமிழனுக்கு எதிராய் நடக்கும் இந்த மாபெரும் பொருளாதார போரில் தமிழன் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறான் என்பதை மட்டும் உணர முடிகிறது. இதை தமிழன் எப்போது உணர்வது?
பட்டாலும் கெட்டாலும் வருந்தாத திருந்தாத தமிழன் இருக்கும்வரை தமிழனுக்கு எதிரான இந்தப் பொருளாதாரப்போர் தொடர்ந்து கொண்டே இருக்கும். தமிழா! இதையெல்லாம் நீ உணர்ந்து விழிக்கும் போது உன் பொருளாதார வளம் வறண்டு இருக்கும் … அல்லது மாண்டு இருக்கும்????

பை.தில் டிவி செந்தில்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தமிழர் படை மாவட்ட செயலாளர்
கிருஷ்ணகிரி

Bala Trust

About Admin

Check Also

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவை பதவி விலகக் கோரி காங்கிரஸ் சார்பில் மனு…

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரை பாராளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தரகுறைவாக …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES