திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முற்றோதல் நிகழ்ச்சி
திருச்சியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முற்றோதல் நிகழ்ச்சி திருச்சி தமிழ்ச்சங்கம் தரைதளத்தில் நடைபெற்றது.
திருவள்ளுவர் தினம் என்பது திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது திருநாளன்று, திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.
எழுத் தமிழ் இயக்க நிறுவனர் அறிஞர் குமாரசாமி, பாவனார் தமிழ் அமைப்பு நிறுவனர் முனைவர் திருமாறன், திருக்குறள் கல்வி மைய தலைவர் முருகானந்தம் , பைந்தமிழ் இயக்க தலைவர் பழ தமிழன் ,அரும்பாவூர் தமிழ்ச்சங்க மருத்துவர் கோபால், கோவிந்தம்மாள் தமிழ்மன்ற முதன்மை தலைவர் கோவிந்தசாமி, முரளி, வெற்றிச்செல்வன் உட்பட பலர் திருவள்ளுவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் முற்றோதலை படித்தனர். உலகத் திருக்குறள் பேரவை துணைத் தலைவர் முருகானந்தம் குறள்நெறி நடப்போம் கையேட்டினை வெளியிட்டு பேசுகையில், திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல். வாழ்க்கைப் பயணத்திற்கு திருக்குறள் வழிகாட்டி. இன்னல் சூழும் காலங்களில் திருக்குறள் ஒரு கலங்கரை விளக்கம். துன்பம் நேர்கையில் திருக்குறள் இதம் தரும் .ஒரு இன்னிசை பாடல். நட்புக்கு திருக்குறள் கைகொடுக்கும் .வினைச் செயல்களுக்கு சிறந்த திட்டங்கள் தரும் நம் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு சூழ்நிலைகளுக்கும் திருக்குறளில் விடை உள்ளது என்றார்.