திண்டுக்கல் ஜன. 17:
குஜிலியம்பாறை வட்டம், கோட்டாநத்தம் கிராமம் சேர்வைகாரன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு அறிவியலாளர் திரு. அன்பு கென்னித் ராஜ் மற்றும் Sacca Institute of Freight and Tourism நிறுவனர் திரு. வீரபாபு அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். திருமதி. மணிமேகலை தங்கராஜ் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் கோட்டா நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. மாரியம்மாள் ரமேஷ், துணைத் தலைவர் திரு. கேசவன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், திரு.PTR. கலைச்செல்வன், திரு.பொன்னுத்துரை, திரு.சதீஷ் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.