Wednesday , March 18 2026
Breaking News
Home / செய்திகள் / ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி சென்னையில் பாஜக விவசாய அணி சார்பாக ஆர்ப்பாட்டம்
NKBB Technologies

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி சென்னையில் பாஜக விவசாய அணி சார்பாக ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை, டிசம்பர்.28-

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க கோரி பாஜக விவசாய அணி சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி மாநில துணைத்தலைவர் வளசை முத்துராமன் ஜி தலைமையில் நடைபெற்றது.

பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், விவசாய அணி மாநிலச் செயலாளர் ராமலிங்கம் மற்றும் மாவட்ட,மண்டல் தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வளசை முத்துராமன் ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், நம்பர் 1 இல் இருந்த கேரளாவை மூன்ற இடத்துக்கு தள்ளிவிட்டு தேங்காய் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது ஆனா கேரளாவில் மட்டையுடன் கூடிய தேங்காயையும் கொப்பரையும் சேர்த்து கேரளா அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்

தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரமாக தென்னை மரம் விளங்குவதால் மத்திய அரசு சார்பில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை
கடைகள் மூலமாக ஒரு கிலோ ரூ.108.60-க்கு கொப்பரை கொள்முதல் செய்கிறது. அந்தவகையில், தற்போதுள்ள கொப்பரை தேங்காய்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு உள்ளது.

எனவே, தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக 66 இல் அளித்த வாக்குறுதிப்படி தேங்காய் கொப்பரைகளை கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தேங்காய் எண்ணையாக மாற்றி பாமாயிலுக்கு பதிலாக
தேங்காய் எண்ணெயை 32,000 ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES