Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / குடிசையில் வாழும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி.நெட், திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகள்
NKBB Technologies

குடிசையில் வாழும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி.நெட், திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகள்

எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி.நெட், அன்னை வசந்தா டிரஸ்ட் இணைந்து குடிசையில் வாழ் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது

மதுரை, ஜனவரி.10-

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி.நெட், அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக பொங்கல் திருநாளை முன்னிட்டு குடிசையில் வாழும் ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா மற்றும் தொடர்ந்து 600 வது நாள் உணவு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி பழனிமுருகன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு செயலாளர் சித்ரா ரகுபதி முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருமங்கலம் நகர் மக்கள் மன்ற தலைவர் இரா.சக்கையா, தொல்காப்பியர் மன்ற தலைவர் இருளப்பன் ஆகியோர் பொங்கல் தொகுப்புகளை வழங்கினர்.

டிரஸ்ட் கவுரவ ஆலோசகர் அழகர்சாமி, துணைத்தலைவர் ஆறுமுகம், ஒருங்கிணைப்பாளர் கணேசன்மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியின் முடிவில் டிரஸ்ட் பொருளாளர் அருள்ஜோதி ஆறுமுகம் நன்றி கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES