Tuesday , December 3 2024
Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக பிப்.3 ஆம் தேதி அன்று அனைத்து மாவட்டங்களிலும் போராட்ட ஆயத்த மாநாடு…!
MyHoster

தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக பிப்.3 ஆம் தேதி அன்று அனைத்து மாவட்டங்களிலும் போராட்ட ஆயத்த மாநாடு…!

வரும் பிப்ரவரி 3- ஆம் தேதி அன்று போராட்ட ஆயத்த மாநாடு மற்றும் பிப்.21 ஆம் தேதி அன்று சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கும் பெருந்திரள் முறையீடு நடைபெறும் என தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது

தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பாக செயற்குழு கூட்டம் மாநில தலைவர் சசிகலா தலைமையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மூட்டா அரங்கத்தில் நடைபெற்றது.

செவிலியர்களுக்கு தமிழக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தும் விதமாக தொடர் இயக்கங்கள் நடத்த கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.

இது குறித்து மாநில தலைவர் சசிகலா கூறுகையில், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல எம்.ஆர்.பி செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப என்.எம்.சி மற்றும் ஐ.பி.ஹெச்.எஸ் பரிந்துரைகளின் அடிப்படையில் நிரந்தர பணியிடங்கள் உருவாக்க வேண்டும்.

கொரோனா காலகட்டத்தின் போது இரண்டரை வருடங்கள் பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

காலியாக உள்ள தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு வரையறுக்கப்பட்ட பணி நேரத்தை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் கோரிக்கைகள் மற்றும் பணி நியமன நிபந்தனைக்கு மாறாக 8 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பூதிய முறையில் பணி செய்யும் செவிலியர்களுக்கு அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி 27/01/2024 முதல் 29/01/2024 வரை அனைத்து செவிலியர்களும் முதல்வர் அவர்கள் மக்கள் நல்வாழ்த்துரை அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்புவது என்றும் 31/01/24 மற்றும் 01/02/2024 ஆகிய இரு தினங்கள் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்வது என்றும், 03/02/2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது என்றும், 21/02/2024 அன்று சென்னையில் முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கும் பெருந்திரள் முறையீடு நடத்துவது என்றும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து தோழர்களும் போராட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து கோரிக்கையை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்

இதில் பொதுச்செயலாளர் சுபின், மாநில பொருளாளர் மைக்கேல் லில்லி புஷ்பம், துணைத்தலைவர்கள் விமலாதேவி, அஸ்வினி கிரேஸ், சுதாகரன், ஹேமசந்திரன், வினோதினி,ராகவன் இணைச்செயலாளர்கள் விக்னேஷ், ஜான்பிரிட்டோ, சுஜாதா,பெஜாக்சின், அசோக் மாதவன், சேசுடெல்குயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக கரூர் விஷன் 2030 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்….

வணக்கம்..! அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக President செந்தில் விஷ்ணு ராம், CII அமைப்பு சார்ந்த சேர்மன், கோ சேர்மன், …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES