*சிறுவனை செருப்பை கழட்ட வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் : காயல் அப்பாஸ் கண்டனம் !*
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதுமலை வனப் பகுதியில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் படை சூழ்ந்திருக்கும் போது, ஆதிவாசி சிறுவன் ஒருவனை அதிகாரத்தில் அழைத்து அதிகாரிகள் முன்னிலையில் தமது செருப்பை கழட்ட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த அடாவடி செயலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது .
மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் துணை முதல் ஓ பன்னீர் செல்வம் அவர்களும் தமிழகத்தில் மக்களுக்கான நல்லாட்சி சிறப்பாக செய்து வருகிறார்கள் . இந்த நிலையில் ஓரு சில அமைச்சர்களின் சர்ச்சைகுறிய பேச்சால் மற்றும் செயலால் மக்களிடையே கெட்ட பெயரை சம்பாதிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
எனவே : இச்சம்பவம் ஆதிவாசி மக்களிடையே பெரும் மன உலைச்சலை ஏற்படுத்திள்ளது . ஆகவே ஆதிவாசி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் கேட்க வேண்டும். இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் வகையில் அ தி மு க தலைமை அமைச்சர் திண்டுக்கல் சினீவாசனை கண்டிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.