திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதி மற்றும் புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் கையெழுத்து உள்ளனர்.
இத்தகைய சூழலில் இந்த பத்து தொகுதிகளில் களமிறங்க போட்டியிடப் போகும் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இதற்கு காரணம் கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் கடலூர், மயிலாடுதுறை, நெல்லை ஆகிய மூன்று தொகுதிகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
மாறாக தேனி, திருச்சி, ஆரணி ஆகிய தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. இருப்பினும் கடந்த முறை காங்கிரஸ் கட்சியில் களமிறக்கப்பட்ட அதை வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் கட்சி சில மாற்றங்களை கொண்டு வந்து புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திருவள்ளூர் தனி தொகுதியில் தேசிய காங்கிரஸ் கட்சியின் ஐ.டி பிரிவு ஆலோசகர் சசிகாந்த் செந்தில் அல்லது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.
அதேபோன்று கடலூர் தொகுதியில் கே.எஸ் அழகிரியும், சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரமும், கிருஷ்ணகிரி தொகுதியில் செல்வகுமாரும், கரூர் தொகுதியில் ஜோதி மணியும், விருதுநகரில் மாணிக்கத்தாகூரும், கன்னியாகுமரியில் விஜய் வசந்தம் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் அந்த தொகுதியில் பிரவீன் சக்கரவர்த்தி திருநாவுக்கரசர் அல்லது சுரண்யா ஐயர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் வைத்தியலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.