Saturday , March 21 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் அண்ணா தொழிற்சங்கம் பி.ஆர்.சி மண்டலம் சார்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
NKBB Technologies

மதுரையில் அண்ணா தொழிற்சங்கம் பி.ஆர்.சி மண்டலம் சார்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ முன்பு அண்ணா தொழிற்சங்கம் பி.ஆர்.சி மண்டலம் சார்பாக மண்டல செயலாளர் மகாலிங்கம் தலைமையிலும், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன் முன்னிலையிலும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார்,சக்திமோகன், எம்.எஸ்.கே.மல்லன், வி.பி.ஆர்.செல்வகுமார், பரவை ராஜா, மார்க்கெட் செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜாங்கம், மூவேந்திரன்,உசிலை தவசி, அனுப்பானடி பாலகுமார்,பி.ஆர்.சி திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நீர் மோர் பந்தல் தொடர்ந்து 15 நாள் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES