☝☝இந்த ஒற்றை புகைப்படம் பல லட்சம் மக்களின் வலிகளை பிரதிபலிக்கிறது.
இத்தாலியின் அதிபர் . மேம்படுத்தபட்ட சுகாதார கட்டமைப்பு இருப்பினும் வைரஸை கட்டுபடுத்த இயலாமல் செய்வதறியாது கண்ணீருடன் நிற்கின்றார்.
இத்தாலியில் நிமிடத்திற்கு ஒருவர் பாதிப்பும் , சராசரியாக 5 நிமிடத்திற்கு ஒரு இறப்பும் நிகழ்ந்து வருகிறது.
அறிவியலும் செய்வதறியாது விலகி நிற்கிறது. என்ன செய்ய போகிறோம் என வல்லரசு நாடுகளே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்த நிலையில் மக்களது ஒத்துழைப்பு மட்டுமே நிலையை மட்டுபடுத்தும்.
கரோனோவால் பாதித்த பெண் தெரிந்தும் எனக்கு வந்தது பிறருக்கும் வர வேண்டும் என விமானம், தொடர்வண்டியில் பயணித்து பரப்பியது நடந்த நிகழ்வு.
இதுவும் ஒரு மன நோயே. நான் துன்பப்படும் போது மற்றவர் எப்படி மகிழ்வாய் இருக்கலாம் என்பது.
ஞாயிறு ஊரடங்கு என்றதும் சனி அன்று மக்கள் இரட்டிப்பு கூட்டமிட்டு கூடி நோய் பரவல் வீதத்தை அதிகரித்ததும் அறிந்ததே.
இவர்களுக்கும் அந்த பெண்ணிற்கும் மனதளவில் பெரிய வித்தியாசம் இல்லை.
மாணவர்களுக்கு விடுமுறை விட்டது பாதுகாப்பிற்கு. ஆனால் அதனை சுற்றுலா போல ஊர் சுற்றி கொண்டாடி மகிழ்வது வருத்தம் தருகிறது என சுகாதார துறை அமைச்சர் வருந்தியது கண் முன் எட்டி செல்கிறது.
பாதித்த 3 லட்சம் பேரில் 13 ஆயிரம் பேர் இறப்பு . மீதமுள்ள 2.8 லட்சம் மக்கள் நோய் பரப்பும் இடை உடலங்களாக உள்ளனர்.
பரவும் வைரஸ் நம் ஊருக்கெல்லாம் வர போகுதா என அதிமேதாவி வசனம் பேசி பொறுப்பின்றி விழிப்புணர்வின்றி நடப்போர் விழித்து கொள்ளுங்கள். உங்களால் உங்கள் ஊரில் பெரும் பாதிப்பு ஏற்படலாம்.
வரும் நாட்கள் மிக முக்கியமானது . 2வது Stage ல் உள்ள நாம் 3 வது 4வது Stage செல்லாமல் தடுப்பதும் நம் விழிப்புணர்விலே உள்ளது.
நம் வீட்டில் உள்ளவர்களுக்காவது தேவையற்ற பயணம் தவிருங்கள்.
அதிபரின் கண்ணீர் ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கான அழுகுரல்.
இறந்தவர்களை தனிமைபடுத்தி புதைக்கவே இங்கு இடம் இல்லை என வருந்தும் இத்தாலி நாட்டு அதிபர் குரல் நிகழ்வின் முக்கியதுவத்தை உணர்த்துகிறது.
நோய் துவங்கிய முதல் வாரத்தில் 200 பேர் மட்டுமே பாதித்த இத்தாலியில் தற்போது நேற்று மட்டும் 750 இறப்பை கடந்துள்ளது. நோய் பிறப்பிடம் சீனாவையும் மிஞ்சிய பரவல் .
வெயில் அதிகம் இங்கு பரவாது என்பது மடமை. வெப்ப நிலை பரவுதல் வேகத்தை வேண்டுமானால் மட்டுப்படுத்தும். ஆனால் பரவாமல் தடுக்காது.
வெப்ப நிலை அதிகமான பல நாடுகளில் வைரஸ் தீவிரமாய் பரவி வருவது பார்த்து வருகிறோம்.
மருந்தே கண்டறியா நோயிற்கு மருந்து தனிமைபடுதல் மட்டுமே.
மனித உயிரினத்தை காக்க தற்போது இந்திய மக்கள் நிச்சயம் அரசிற்கு துணை நிற்க வேண்டும்.
நோயிற்கு ஆட்பட்டு தனிமைபடுத்தபடும் போது ஆகப்பெரிய வெறுமையை உணர்வதை தவிர்க்க இன்று வீடுகளில் தனிமைபட்டிருப்பது சிறந்தது.
வீர வசனம் பேசுவதை தவிர்த்து சமூக பரவலை முறியடிக்க வேண்டிய தருணம் இது. கோரோனா பரவும் சங்கிலியை உடைப்பது மிக அவசியம்.
பல முறை இந்திய முன்னெடுப்புகள் உலகிற்கு பாடமாக அமைந்துள்ளது. இம்முறையும் நம் கட்டுபாடுகளால் உலக நாடுகளுக்கு உணர்த்தி வைரஸிடம் இருந்து மீண்டு வர வழி சொல்லுவோம்.
இனி பழைய படி வாழ்வை நகர்த்தலாம் என பயணிக்க எண்ணினால் அது முட்டாள்தனம். வைரஸை மெது மெதுவாய் நீக்கி இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கடைசி மனிதனை குணப்படுத்தும் வரை இந்த உயிரி போர் ஓயாது.
அறிவியலும் மருத்துவமும் ஒரு நாள் துணை வரும் எனும் நம்பிக்கை உள்ளது.
அது எட்டும் நாள் வரை தனித்து நிற்போம்.
மனிதம் என்ற உணர்வால் இணைந்து நிற்போம்.
அரசிற்கும் – இதற்காக களத்தில் உயிரை பணயம் வைத்து போராடும் மனிதர்களுக்கும் முழுவதுமாக துணை நிற்போம்.
இத்தாலி அதிபரின் கண்ணீரின் வலி உணர்ந்து மனித சமூகத்தை மீட்டு செல்வோம் விழிப்புணர்வால் …