Tuesday , July 29 2025
Breaking News
Home / செய்திகள் / Newsகொரோனா வைரஸிற்கு 13 தடுப்பூசிகள்! மகிழ்ச்சியான செய்தி!
NKBB Technologies

Newsகொரோனா வைரஸிற்கு 13 தடுப்பூசிகள்! மகிழ்ச்சியான செய்தி!

சோவியத் கால உயிரியல் ஆயுத ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் குழு கொரோனா தொடர்பில் 13 தடுப்பூசிகளை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் தெரியவருதாவது,

கொரோனா தடுப்பூசி தொடர்பில் விலங்குகளுக்கும் அதேவேளை மனிதர்களுக்கும் அடுத்த வாரம் சோதனை மேற்கொள்ளப்படும் என பிரித்தானியா அறிவித்த நிலையில், தற்போது ரஷ்யாவில் இருந்து செயல்பட்டுவரும் சோவியத் கால உயிரியல் ஆயுத ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இதை அறிவித்துள்ளது.

ரஷ்ய விஞ்ஞானிகள் குழு நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட 253 பேருக்கும், அந்த 13 தடுப்பூசிகள் ஒவ்வொன்றிலிருந்தும் மாதிரிகளைச் சோதித்து, பின்னர் அவற்றை சைபீரியாவின் அருகிலுள்ள வெக்டர் ஸ்டேட் ரிசர்ச் சென்டர் ஆஃப் வைராலஜி அண்ட் பயோடெக்னாலஜி ஆய்வுக்கு அனுப்ப உள்ளனர்.

மொத்தம் 13 தடுப்பூசிகள் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அதில் ஒன்று அல்லது மூன்று தடுப்பூசிகள் ஜூன் மாதத்தில் தயாராகும் என ரஷ்ய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய நாடுகளை ஒப்பிடுகையில் ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு மிக மிகக் குறைவு. இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஒருவர் மட்டுமே இறந்துள்ளதாக அரசு தரப்பு அறிவித்துள்ளது.

ஆனால், உண்மை நிலவரத்தை வடகொரியா போன்று ரஷ்யாவும் மூடி மறைப்பதாக பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

1973 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஆய்வகமானது வைசூரி அல்லது பெரியம்மை நோய்க்கான மருந்தை வியாபார ரீதியில் தயாரித்துள்ளது.

மட்டுமின்றி மிகவும் கொடூரமான Marburg என்ற கிருமியை ஆயுதமாகவும் பயன்படுத்தியுள்ளது.

தற்போது இந்த ஆய்வகம் பிளேக், ஆந்த்ராக்ஸ், எபோலா, ஹெபடைடிஸ் பி, எச்.ஐ.வி, சார்ஸ் மற்றும் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்துகளை உருவாக்குவதில் முழு மூச்சில் ஈடுபட்டு வருகிறது.

 

Bala Trust

About Admin

Check Also

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES