Wednesday , December 17 2025
Breaking News
Home / இந்தியா / நான் 6 பந்தில் 6 சிக்ஸ் அடித்த அந்த பேட்டை வாங்கி தொட்டு பார்த்து கில்க்ரிஸ்ட் என்னிடம் கேட்ட கேள்விகள் இவைதான் – யுவ்ராஜ் நெகிழ்ச்சி
NKBB Technologies

நான் 6 பந்தில் 6 சிக்ஸ் அடித்த அந்த பேட்டை வாங்கி தொட்டு பார்த்து கில்க்ரிஸ்ட் என்னிடம் கேட்ட கேள்விகள் இவைதான் – யுவ்ராஜ் நெகிழ்ச்சி

2007-ம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணிக்கெதிராக ருத்ரதாண்டவம் ஆடிய யுவராஜ் சிங்கை தற்போது வரை நம் யாராலும் மறக்க முடியாது. அந்த உலகக் கோப்பைத் தொடரில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் பறக்க விட்டார் இவர். கேரி சோபர்ஸ், ரவிசாஸ்திரி, ஹெர்செல் கிப்ஸ்ஆகியோருக்கு அடுத்தபடியாக ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி வீரர் யுவராஜ் சிங் தான். அதுவும் உலகக் கோப்பை தொடரில் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். உலகக்கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட இந்த சிக்சர்கள் இந்திய ரசிகர்களின் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும். அதே போட்டியில் 12 பந்துகளில் அரைசதம் அடித்தார் யுவராஜ். இதுவும் ஒரு சாதனையாகும். அன்று இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூ பிலின்டாப் யுவராஜ் சிங்கை சீண்டினார், இதன் காரணமாக ஆக்ரோஷமாக இருந்த யுவராஜ் 12 பந்துகளில் அரை சதம் விளாசினார். இந்த 6 சிக்சர்கள் பற்றிப் பேசிய யுவராஜ் சிங் தற்போது ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : அப்போது ஆஸ்திரேலிய பயிற்சியாளர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் என்னிடம் வந்து பேட்டில் பைபர் உள்ளதா என்று கேட்டனர். அது சட்டபூர்வமான நடவடிக்கை என்ன தெரியுமா? என்று பல கேள்விகளை கேட்டனர். நான் உடனேயே நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். பின்னர் ஆட்ட நடுவர் எனது பேட்டை செக் செய்தார். மேலும், அந்த பேட்டை போலவே 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் நான் பயன்படுத்திய பேட்டும் எனக்கு சிறப்பானது அதுபோன்ற நான் எந்த பேட்டிலும் ஆடியதில்லை என்று கூறினார் யுவராஜ் சிங். யுவ்ராஜின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்திய அணி குறித்தும், கேப்டன் தோனி குறித்தும் பல சுவாரசியமான தகவல்களை யுவராஜ் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Bala Trust

About Admin

Check Also

இந்தியாவின் முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாள்…

அன்புடையீர் வணக்கம் இந்தியாவின் முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை இந்நாளில் பெருமிதத்துடன் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES