Wednesday , December 17 2025
Breaking News
Home / Politics / நேற்று (19.07.2024) புதுக்கோட்டை ஐயா திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது.
NKBB Technologies

நேற்று (19.07.2024) புதுக்கோட்டை ஐயா திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு குறித்தும் ஆலோசனை நடத்தினோம்.

விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள், AICC செயலாளர் திரு.கிறிஸ்டோபர் திலக், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் திரு.எஸ்.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் திரு.ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அவர்கள், அமைப்பு செயலாளர் திரு.ராம்மோகன் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் எம்.பி., அவர்கள், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., அவர்கள், கும்பகோணம் மேயர் திரு.சரவணன் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் திரு.டி.பென்னட் அந்தோனிராஜ் அவர்கள், புதுக்கோட்டை காங்கிரஸ் மாவட்டத்தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், செயல்வீரர்கள் பங்கேற்றார்கள்.

ஆலோசனைக்கூட்டத்தில் நமது நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட சுதந்திர போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டார்கள். இளைஞர்கள் பலர் எனது முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

Bala Trust

About Admin

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES