Monday , July 28 2025
Breaking News
Home / இந்தியா / நடமாடும் வாகனங்கள் சேவை….கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
NKBB Technologies

நடமாடும் வாகனங்கள் சேவை….கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நடமாடும் வாகனங்கள் சேவை....கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 200 நடமாடும் வாகனங்கள் சேவைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கான ஆணைகளையும் வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 200 நடமாடும் வாகனங்கள் சேவைகளை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதற்கிடையேயே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுப் பணிகளில் பணியாற்ற பணியமர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், கருவூலக் கணக்குத்துறை பதவிகளுக்குக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கும், பணிக்காலத்தில் மறைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Bala Trust

About Admin

Check Also

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES