Monday , June 9 2025
Breaking News
Home / தென் மாவட்டங்கள் / மதுரை / மதுரை கொன்னவாயன் சாலை அருள்மிகு ஸ்ரீ ஆலமரம் முனீஸ்வரர் திருக்கோவில் வருஷாபிஷேக விழா..!

மதுரை கொன்னவாயன் சாலை அருள்மிகு ஸ்ரீ ஆலமரம் முனீஸ்வரர் திருக்கோவில் வருஷாபிஷேக விழா..!

மதுரை கொன்னவாயன் சாலை அருள்மிகு ஸ்ரீ ஆலமரம் முனீஸ்வரர் திருக்கோவில் வருஷாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக அன்று காலை மஹா கணபதி ஹோமம், கோ பூஜை மற்றும் ஸ்ரீ முனீஸ்வரருக்கு மஹா அபிஷேகம், அலங்கார சிறப்பு தீபாராதனை, விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அன்று மதியம் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோவில் பூசாரி முன்னாள் ராணுவ வீரர் ஆனந்த், பசும்பொன் மற்றும் சோனைச்சாமியாடி, கூலுச்சாமி வகையறா, திருமலைத்தங்கம் வகையறா, திருப்பதி வகையறா, இஸ்மாயில் கான் வகையறா, பூசாரி இராஜாங்கம் வகையறா மற்றும்

ஏ.பி.டி மாருதி கம்பெனி, ஜி.ஜே.குரூப் ஆப் கம்பெனி, அம்மன் ரெஸ்டாரன்ட், ராசி மருத்துவமனை, பாலமுத்தழகு குழுமம் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் திருவள்ளுவர் தெரு கே என் பி தோட்டம் இந்திரா பிரியதர்ஷினி நகர், சின்னக் கண்மாய்க்கரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இதய தெய்வம் அம்மா ஆட்டோ நிலையம், அகில பாரத இந்து மகாசபா நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ முனீஸ்வரர் கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையில் 50-வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் (சங்கம் ஹோட்டல்)

சிறந்த விருந்தோம்பலில் 50 வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் (சங்கம் ஹோட்டல்)அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES