குளித்தலை நகரத்தில் குளித்தலை பகுதி மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த குளித்தலை அண்ணாநகர் புறவழிச்சாலை மூடப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த பாதையை தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வந்தார்கள் உழவர் சந்தைக்கும், வாரசந்தைக்கும், ரயில்நிலையம், நூலகம், பள்ளிக்கூடம், மற்றும் கிராமங்களுக்குச் செல்லும் மினி பஸ் வழித்தடம், என குளித்தலை மக்களின் அத்தியாவசிய தேவைக்கான இந்த சாலை மூடப்பட்டதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மூடப்பட்ட இந்த சாலையை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக
குளித்தலை நகராட்சி ஆணையர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதல்வர் ,என அனைவருக்கும் மனுக்கள் கொடுக்கப்பட்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம், உட்பட்ட பல கட்டப் போராட்டங்கள் நடத்திய பிறகும். பல அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர் இயக்கங்கள், என அனைத்து தரப்பு மக்களும் போராடிய பிறகும் .மூடப்பட்ட இந்த சாலையை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
3-3-2020 அன்று குளித்தலையில் மூடப்பட்ட சாலையை மீட்க இளைஞர் அமைப்புகள், சமூக ஆர்வலர்களின், ஆலோசனை கூட்டம் நடந்தது அந்த ஆலோசனை கூட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களின் பிரதிநிதிகளாக அஇஅதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு 30 நாட்களில் சாலை திறக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் அதன் பிறகும் சாலை திறக்கப்படவில்லை
பிறகு போராட்டக்குழு இளைஞர்கள் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சரை கரூரில் நேரில் சந்தித்து மனு கொடுத்து பேசியபோது ஒரு மாதத்தில் மூடப்பட்ட சாலை திறக்கப்படும் என உறுதியளித்தார்
கடந்த மாதம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மூடப்பட்ட இந்த சாலையை நேரில் வந்து ஆய்வு செய்த பிறகும்
மூடப்பட்ட இந்த சாலை திறக்க எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே சுடுகாட்டு பிணமாகிய ஐயா அவர்கள் இவர்களின் கனவில் சென்றாவது இந்த மூடப்பட்ட சாலையால் மக்கள் படும் இன்னல்களை எடுத்துக்கூறி பாதையை திறக்க நீங்களாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.