Thursday , July 31 2025
Breaking News
Home / இந்தியா / இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
NKBB Technologies

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிய பாதிப்பு 9 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து  வருகிறது. இந்தியாவில் கொரோனாவால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.55 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில்  கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர்,  இறப்பு விகித நிலவரம்  குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,110 பேருக்கு தொற்று உறுதி; இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,08,47,304 ஆக அதிகரித்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 78 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,55,158 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 14,016 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1,05,48,521 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,43,625 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 97.25% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.43% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.32% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 6,87,138 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 20,25,87,752 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

*இதுவரை 62,59,008 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Thanks to Ippodhu

Bala Trust

About Admin

Check Also

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் மோசடி…

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES