அரவக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த மணல்மேடு பகுதியில் இன்று அரவக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஈஸ்வரன் அவர்கள் பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு மற்றும் குற்றம் நடைபெறாமல் தடுப்பது எப்படி என்று மக்களிடம் அறிவுரை வழங்கினார். பொதுமக்களும் ஆர்வமுடன் கேட்டனர். உடன் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சென்றாயன் மற்றும் முதல் நிலை காவலர் திரு விசுவநாதன்.
மணல்மேடு அதிகமாக மக்கள் கூடும் இடமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது…
கொரோனா மூன்றாம் அலை வரும் நேரத்தில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது சற்று மனது ஆறுதல் அளிக்கிறது….
இளைஞர் குரல் சார்பாக காவல்துறைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.