பழவேற்காடு மீனவர்களின் 13 ஆண்டு கால வாழ்வாதார பிரச்சனையான காட்டுப்பள்ளி L&T கப்பல் கட்டும் துறைமுகத்தில் பணியாற்றும் 250 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்றும் இதுவரை உயர்த்தப்படாமல் உள்ள ஊதிய உயர்வு வேண்டியும், 2008ஆம் ஆண்டு அறிவித்த 2000 வேலை வாய்ப்பில் மீதம் உள்ள 1750 வேலையையும் மீண்டும் சுற்றி உள்ள பகுதிகளில் பணி வழங்கவேண்டும் எனவும் அனைத்து மீனவ கிராமங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்ட செய்தி அறிந்து ஜுலை 27 அன்று ஆர்.டி.ஓ தலைமையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணன் TJ Govindarajan, #நம்ம MLA Thiruvottiyur K.P. Shankar, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் Durai Chandrasekhar MLA, தாசில்தார், காவல்துறை உயர்அதிகாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை ஏற்று போராட்ட முடிவை நிறுத்திவைத்தனர். அதனை தொடர்ந்து பழவேற்காடு அனைத்து மீனவ கிராம பிரதிநிதிகளுடன் தொழில் துறை அமைச்சர் அண்ணன் Thangam Thenarasu தொழிலாளர் நலன்திறன் அமைச்சர் அண்ணன் CV Ganesan ஆகியோரை சந்தித்து கோரிக்கை மணு அளித்தனர். நிச்சயம் 250 தொழிலாளர்களை ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம் செய்யவும், மீதம் உள்ள வேலை வாய்ப்பில் படிப்படியாக பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
Check Also
Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ பின்னணி…
Saregamapa Li’l Champs சீசன் 4 இன் போட்டியாளரான யோகஸ்ரீ, அறிமுகச் சுற்றில் தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்: *வயது …