சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (நவ.14) காலை ஒருகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் …
Read More »கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சேலத்தில் நிறைவடையும். பிரசார பேரணியில் 188 இருசக்கர வாகனங்கள் பங்கேற்றுள்ளனர்.
Read More »திராவிட மாடல் ‘திமுக’ அரசால் சிறப்பிக்கப்பட்ட இடதுசாரி தலைவர் சங்கரய்யா-முதல் தகைசால் தமிழர் விருது!
சென்னை: இந்தியாவின் முதுபெரும் இடதுசாரித் தலைவரான இன்று மறைந்த சங்கரய்யாவுக்கு (வயது 102) தமிழ்நாட்டில் ஆளும் திராவிட மாடல் திமுக அரசு தமது முதலாவது தகைசால் தமிழர் விருது வழங்கி பெருமைப்படுத்தியது. இந்தியாவின் விடுதலைக்காக சிறைவாசம் அனுபவித்தவர் சங்கரய்யா. 95 வயது வரை தமது போராட்ட குணத்தை இடைவிடாது கடைபிடித்தவர். 95 வயதில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்ட களத்தில் நின்றவர் சங்கரயா. இன்று வயது முதுமையின் காரணமாக 102 …
Read More »மத்திய பிரதேசத்தில் குவிந்துள்ள தலைவர்கள்! சூடு பிடிக்கும் தேர்தல் களம்!!
மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு குவிந்துள்ளனர். 230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் அதுபோல காங்கிரஸ் முன்னாள் …
Read More »‘மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர்தான் கிடைக்கும்!’ – சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் பேச்சு!!
மிகப்பெரிய பொய்யர் எனத் தேடினால் மோடியின் பெயர்தான் கிடைக்கும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அங்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் பூபேஷ் பகேல், ‘பிரதமர் மோடி …
Read More »காஷ்மீர் இந்தியாவில் இருப்பதற்கு காரணமானவர் ஜவஹர்லால் நேரு: கே.எஸ்.அழகிரி பேட்டி
சென்னை: ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்த நாளையொட்டி, கிண்டி கத்திபாராவில் உள்ள அவரது சிலைக்கு அருகே அலங்கரிக்கப்பட்ட படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று நடந்தது. இதில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, நிர்வாகிகள் கோபண்ணா, விஜய் வசந்த் எம்பி, அசன் மவுலானா எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர். நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு …
Read More »பாரதி நர்சரி & பிரைமரி பள்ளி சார்பில் குழந்தைகள் தினம் பள்ளப்பட்டியில்…
இமாம் அபு ஹனிபா டிரஸ்ட் நடத்தும் பாரதி நர்சரி & பிரைமரி பள்ளி சார்பில், இன்று குழந்தைகள் தினம் (பண்டிட் ஜவஹர்லால் நேரு) பிறந்த நாள் குழந்தைகள் தினம் முறையாக அனுசரிக்கப்பட்டது. மாவட்ட அரசு தலைமை காஜி சிராஜுதீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்க, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகிக்க, நிகழ்ச்சி இனிமையாக துவங்கியது. அரவக்குறிச்சி ஆர்டிஓ தோழர் குண்டுமணி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக …
Read More »தமிழ்நாட்டில் பருவமழையை ஒட்டி 4967 சிறப்பு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன : அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
சென்னை : தமிழ்நாட்டில் பருவமழையை ஒட்டி 4967 சிறப்பு நிவாரண முகாம்களும் கடலோர மாவட்டங்களில் 121 நிரந்தர உதவி பல்நோக்கு மையங்களும் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 19 செமீ மழை பெய்துள்ளது என்றும் நாகை. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் அளித்துள்ளார்.
Read More »”பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அளித்தது காங்கிரஸ்”: ப.சிதம்பரம்
புதுடெல்லி: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கியது காங்கிரஸ் கட்சியே என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு எப்பொழுது அமலுக்கு வந்தது என்ற உண்மைகளைத் தெரிந்து கொள்வோம். 1951ஆம் ஆண்டு சமூக, பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு ஏதுவாக அரசியல் சாசனம் திருத்தப்பட்டது. அதை நிறைவேற்றியது …
Read More »அதிரடியாக பறந்த உத்தரவு.. அரசு மருத்துவமனை கேண்டீன்களில் ‘ரெய்டு’.. உணவு பாதுகாப்புத்துறை ஆணை!
சென்னை: அரசு மருத்துவமனைகளில் உள்ள கேண்டீன்களை ஆய்வு செய்ய மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தனியார் உணவக கேண்டீனில் எலி உலாவிய வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் அதிரடி உத்தரவு பறந்துள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் உணவு பொருட்களின் மீது எலி ஓடித் திரிவது போன்ற வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவியது. …
Read More »
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்